சி.பி.எம். கட்சி சார்பில் அகில இந்திய மாநாடு நிதியளிப்பு பொதுக்கூட்டம்

0 42

திருச்சி, மார்ச் 21 திருச்சி மாவட்டம், தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 24-வது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார் .ஒன்றிய குழு நிர்வாகிகள் சேகர், வீரவிஜயன், காமராஜ், ரங்கராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன், மூத்த நிர்வாகி சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், பாலகுமார், பேரூராட்சி கவுன்சிலர் சத்யா உள்ளிட்ட பலர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது புளியஞ்சோலை முதல் மகாதேவி ஏரி வரை புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், தும்பலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட வேண்டும், தா.பேட்டை, மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலை திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளம் வாய்க்கால் உள்ளிட்டவைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது தா.பேட்டை ஒன்றியத்தின் சார்பாக அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.