எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
திருச்சி, செப்.25 எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை யை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருமையிலும், அவமரியாதையாகவும் பேசியதை கண்டித்து, திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் J.இளையராஜன் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியும் சாலை மறியலில் ஈடுபட்டும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை தாக்கியும் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லெனின் பிரசாத் கலந்து கொண்டார், மேலும் லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணியன், நகரத் தலைவர் ஆனந்தன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலரும், நகர செயலாளருமான ஞானகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.