பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம்…

0 264
Stalin trichy visit

கல்லக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் திருச்சி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளின் அறிமுகம் மற்றும் நியமன கடிதம் வழங்கினர். மேலும் அமைப்பு பணி மற்றும் கட்சி வளர்ச்சியின் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பிரின்ஸ், மாநில அமைப்பு செயலாளர் மணிமாறன், மகளிர் அணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜானகி, மாவட்ட பொருளாளர் சசிகலா, மாவட்ட துணைத் தலைவர் லூகாஸ், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, மாவட்ட அமைப்பு தலைவர் அன்பில் மனோகரன், ஊடக பேரவை மாவட்ட செயலாளர் ராமஜெயம், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் குமார், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், லால்குடி ஒன்றிய தலைவர் நடராஜ், லால்குடி நகர செயலாளர் பச்சையப்பன், லால்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தினேஷ், மாவட்ட இளம் பெண்கள் அணி செயலாளர் காயத்ரி விஜய், புதிதாக பொறுப்பேற்ற உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் புள்ளபாடி தமிழ், மாவட்ட துணை தலைவர் சங்கரநாராயணன் மட்டும் மாவட்ட ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.