உத்தமர் கோவிலில் மும்மூர்த்திகளும் ஒன்றாக தனித்தனி கேடயங்களில் திருவீதி உலா..
உத்தமர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா. பிரம்மா, விஷ்ணு ,சிவன் மும்மூர்த்திகளும் ஒன்றாக தனித்தனி கேடயங்களில் திருவீதி உலா.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவிலில் ஊராட்சியில் மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் குடிகொண்டிருக்கும் அருள்மிகு உத்தமர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் அமைந்துள்ளது மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் குடிகொண்டிருக்கும் அருள்மிகு உத்தமர் கோவில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இத்திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருநாளில் உலகில் எங்கும் காண முடியாத காட்சியாக வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி கேடயங்களில் ஒன்றாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் ஒன்றாக தரிசனம் தருவதை காண்பது பக்தர்களுக்கு வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம் ஆகும் .
இத்திருக்கோயிலில் கதம்ப மகரிஷி என்ற மகாமுனிவர் கடும் தவத்திற்க்காகத்தான் மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் காட்சி அளித்ததாக திருக்கோயிலின் புராண வரலாறு கூறுகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பிரம்மா,விஷ்ணு,சிவன் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள்,கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.