பீகார் சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி : பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
திருச்சி, நவ.15 பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிவெற்றி பெற்றது. அதனைக் கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்சி தெப்பக்குளம் காந்தி சிலை வரை பேரணியாக வந்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.