மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பியோட்டம்

0 148
Stalin trichy visit

திருச்சி அக். 2 திருச்சி மத்திய ஜெயிலில் 1500க்கு மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளில் சில கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்து ஜெயில் வளாகத்தில் விவசாயப் பணி மற்றும் கோழிப்பண்ணை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யாளுர் வடமதுரை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்று இங்கு அடைக்கப்பட்டிருந்தார் அவரை ஜெயில் அதிகாரிகள் கோழிப்பண்ணை வேலைக்கு ஈடுபடுத்தி வந்தனர் வழக்கம்போல் சக கைதிகளுடன் அவரை கோழிப்பண்ணை பணியில் ஈடுபடுத்தினர்.

அப்போது ராஜ்குமார் நைசாக அங்கிருந்து காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது பின்னர் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதை தொடர்ந்து மத்திய ஜெயில் அதிகாரி வெங்கடசுப்பிரமணி கே.கே. நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.