கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் குணமடைந்தார்!

0 247
Stalin trichy visit

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். விழித்திரு விலகி இரு வீட்டில் இரு என்பதை கடைபிடிக்கவேண்டும். திருச்சி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.