அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

0 15
Stalin trichy visit

திருச்சி, ஆக.29 திருச்சி மன்னார்புரம் புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வம் மகன் லோகேஷ் பாண்டியன் (வயது 22). கார் டிரைவரான இவர் கடந்த 2-6-2023 அன்று காலை ராக்கின்ஸ் ரோட்டில் ரெயில் நிலையம் நோக்கி தனது நண்பரின் மோட்டார் சைக் கிளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த லோகேஷ் பாண்டிய னுக்கு இருகால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 62 சதவீதம் ஊனமடைந்தார். இதனால் தனக்கு இழப் பீடு பெற்றுத்தரக்கோரி திருச்சி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சிறப்பு சார்பு நீதிபதி ராமதாஸ், பாதிக்கப்பட்ட லோகேஷ் பாண் டியனுக்கு ரூ.40 லட்சத்து 11 ஆயிரத்து 816 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.