மண்ணச்சநல்லூரில் நிதி நிறுவனத்தில் கடன் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
திருச்சி,ஆக.28 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதி யில் நிதி நிறுவனத்தில் கடன் தருவதாககூறிபல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க பொதுமக்கள் திரண்ட தால் பரபரப்பு ஏற்பட் டது.
சென்னையை தலைமை யிடமாக கொண்டு ஒரு தனி யார் நிதி நிறுவனம் இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த நிதி நிறுவனத்திற்கு மண்ணச் சநல்லூர், புள்ளம்பாடி, திருச்சி உள்ளிட்ட இடங் களில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளை களில் பல பெண்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர் கள் மண்ணச்சநல்லூர் மற்” றும் திருப்பைஞ்சீலி உள்
ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு சென்று ரூ.5 லட்சம் கடன் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி உள்ள னர்.
இதைநம்பிய பொதுமக்கள் ரூ.5லட்சம் கடன் கேட்டுள்ள னர். அப்போது ஒரு லட்சத் /திற்குரூ.3 ஆயிரம் என்ற கணக் கில் 5 லட்சம் ரூபாய்க்கு ஒவ் வொருநபரிடமும் சுமார்ரூ.15 ஆயிரம் வசூல் செய்ததாக தெரிகிறது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் பணம் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த பெண்கள், 2 மாதங்களுக்கு பிறகு வங்கி யில் பணம் பெற்றுக் கொள் ளுங்கள் என்று காசோலை (செக்) கொடுத்ததாக தெரிகிறது.
அதன்படி பொதுமக்கள் வங்கிக்கு சென்றபோது,அது போலி காசோலை என்று தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து பணம் கொடுத்தவர் கள், அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது,அந்த நிறுவனம் பூட்டி கிடந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அவர்கள், மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு புகார் கொடுக்க திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட் டது.
இந்த சம்பவத்தில் சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் மோசடிநடந்துள்ளதாகதெரி கிறது. தொடர்ந்து பாதிக்கப் பட்ட பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று மண்ணச்சநல் லூர் பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.