மணப்பாறையில் சி.பி.ஐ.(எம்.எல்) திருச்சி மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது
திருச்சி, அக். 28 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் ) விடுதலை CPI (ML )-ன் திருச்சி மாவட்ட 2-வது பிரதிநிதிகள் மாநாடு மணப்பாறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருமண மஹாலில் ஆர்.ராமாயி, எம்.தங்கராஜ், கே.கருப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மாநாட்டை TNEB தொழிற்சங்க மாநில பொருளாளர் P.ராஜேந்திரன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டு பார்வையாளராக மாநில குழு உறுப்பினர் ரெங்கசாமி, சிறப்புரையாளராக மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் 21 நபர்கள் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டு. CPI(ML ) கட்சியின் திருச்சி மாவட்ட குழுவின் புதிய மாவட்ட செயலாளராக செ.ராஜ்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்
புதிதாக தேர்வு செய்யபட்ட மாவட்டகமிட்டி உறுப்பினர்கள்
1.ஞானதேசிகன் 2.ராஜ்குமார் 3.அருண் 4.பாரதி 5.ராஜேந்திரன் 6.பாலு 7.தங்கராஜ் 8.கருப்பையா
9.மாசிலாமணி 10.ஆவா.இளையராஜா 11. மெக்கானிக் இளையராஜா 12. ஜோதிபாசு 13. பாலகுமரன் 14. பழனிவேல் 15. ராமாயி 16. மணிகண்டன் 17. மனோன்மணி 18. வசந்தா 19.மாலதி 20. வின்சென்ட் 21. சரவணன் ஆகியோர் கொண்ட 21 மாவட்டகுழு தேர்வு செய்யபட்டது.
மாவட்டத்தின் அடுத்த கட்ட கட்சி செயல்பாடு மற்றும் எதிர்கால கடமைகளை குறித்து மாநில நிலைக்குழு உறுப்பினர் ஞானதேசிகன் அறிக்கையை முன்வைத்து பேசினார்.
மாநாட்டு முடிவில் நகரச் செயலாளர் ப.பாலு நன்றி கூறினார்.
மாநாட்டில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1. மோடி RSS பிஜேபி யின் காவி பாசிச அரசியலை வீழ்த்துவோம், கூட்டாச்சி மதசார்பின்மை, பண்முகதன்மை போன்ற இந்திய அரசியல் அமைப்பு சட்ட விழிம்பியங்களை பாதுகாப்போம்.
2. உயர்கல்வியை வியாபாரமயமாக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் தனியார் பழ்கலைகழக சட்டதிருத்த மசோதாவை தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக திரும்பபெற வேண்டும்,
3. தலித்துகள், பழங்குடிகள் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் வாக்குகளை திருடும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கைவிட வேண்டும்,
4. வீடு இல்லா அனைவருக்கும் வீட்டு மனையுடன் வாழ தகுந்த குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டும்,
5. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், சட்டகூலி ரூ 319 வழங்க வேண்டும்,
6. பால்பண்னை, துவாக்குடி அணுகுசாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,
7. மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையை போதிய சிறப்பு மருத்துவர்கள், ஊழியர்கள் நவீண கருவிகள் வசதியுடன் 24 மணி நேரமும் செயல்படும் விதம் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றபட்டன.