பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூன் 9 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேஸ்,பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக சிலிண்டருக்கு பாடைகட்டி சகாயமாதா பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வரை பேரணியாக வந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வில் M.அடைக்கலராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய குழு Lஅருமை தாஸ் ஒன்றிய செயலாளர், T ரஜினிகாந்த் மாவட்ட செயற்குழு, மல்லிகா மாவட்ட செயற்குழு, PV வினோத்குமார் ஒன்றிய குழு, C.குமார் ஒன்றிய குழு, T செல்லதுரை ஒன்றிய குழு,
அந்தோணிசாமி ஒன்றிய குழு, கிளை செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.