ஆர்.எஸ்.எஸ்.பிடியிலிருந்து ராமகிருஷ்ண குடிலை மீட்க உதவி : சி.பி.எம்.மாநில செயலாளர் உறுதி

0 216
Stalin trichy visit

திருச்சி, ஆக.28  திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் திருப்பராய்த்துறையில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா குடிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பார்வையிட்டு ஆர்.எஸ்.எஸ்.பிடியிலிருந்து ராமகிருஷ்ண குடிலை மீட்க உதவி : சி.பி.எம்.மாநில செயலாளர் உறுதி அளித்தார்

ஆர் எஸ் எஸ் கும்பலால் ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவசமாக உண்டு உறைவிட பள்ளியாக செயல்படும் இராமகிருஷ்ணா குடிலை கைப்பற்ற துடிப்பதை கண்டித்து முன்னாள் மாணவர்களின் போராட்டக்குழுவும், ஊர் பொதுமக்களும் களப்போராட்டமும், சட்ட போராட்டமும் நடத்தி வரும் நிலையை அறிந்து நேற்று (27.08.2025) நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட பிரம்மச்சாரிகளை சந்தித்து உண்மை நிலை குறித்து கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பா.லெனின், குடிலின் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்  முத்துகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  சேதுபதி, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர்  கருணாநிதி, திருப்பராய்த்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி, அந்தநல்லூர் ஒன்றியக் குழு உறுப்பினர்  ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர் எஸ் எஸ் பிடியிலிருந்து ராமகிருஷ்ணா குடிலை மீட்பதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக மாநில செயலாளர் குடிலின் நிர்வாகிகளிடம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.