கழிவுநீர் கால்வாயில் விழுந்து சிலிண்டர் தொழிலாளி சாவு

0 316
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவரது மகன் ஆனந்த் (வயது 28). இவர் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் ஆனந்த் மது போதையில் முதலியார் சத்திரம் பகுதியில் ஒர்க் ஷாப் எதிராக உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சுந்தரி பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.