வெட்டுக் காயங்களுடன் மகள்; தூக்கில் தொங்கிய தந்தை – திருச்சி அருகே பயங்கரம்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த அதவத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி (72).
இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர் முதல் மனைவி பிருந்தா தேவி. இரண்டாவது மனைவி லதா. முதல் மனைவியின் மகன் அருண். முதல் மனைவி உடல் நலக்குறைவால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்துள்ளார்.

இரண்டாவது மனைவிக்கு பிரபாகரன் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி லதாவும் மகன் பிரபாகரனும் விழாவில் கலந்து கொண்டு இன்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டிற்குள் மூர்த்தி தூக்கில் தொங்கிய படி கீர்த்தனாவுக்கு கை கால்களில் வெட்டு காயங்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் அரிவால் கிடந்ததை கணடு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கீர்த்தனாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து தற்போது போலீசார் என்ன காரணம் என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.