வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் : த.வெ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 49
Stalin trichy visit

திருச்சி, நவ.19  இந்திய இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்படும் தியாகி வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் இணைச்செயலாளர் சிவா மற்றும் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
‎‎இந்த நிகழ்ச்சியில்  தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கடேஷ் பாபு, துணை செயலாளர் ஆனந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் டேனியல், முத்துக்குமார், ஜங்ஷன் பகுதி மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வ உ சிதம்பரனாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.