திருச்சி மருத்துவமனையில் முதல்வர் திறந்து வைக்கும் புதிய கட்டிடம் முன்னேற்பாடு பணிகள் – அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி, நவ. 19 முதல்வர் விஜய் நாளை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – அமைச்சர்கள் ஆய்வு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் 20-ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.110 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறப்புச் சிகிச்சை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார்.
இதனை முன்னிட்டு, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ரமேஷ் ஆகியோர் இன்று மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வரவேற்பறை, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர முன்னெடுப்பு பிரிவு, ct ஸ்கேன் அறை, எக்ஸ்ரே பிரிவு, ஸ்கேன் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு , மருந்தகம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்
மேலும் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்தம், குடிநீர், பொதுமக்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.