தா.பேட்டையில் நாட்டு காய்கறி விதைகளில் ராஜகணபதிக்கு அலங்காரம்
திருச்சி, ஆக.28 தா .பேட்டை சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ராஜகணபதிக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் என்பவர் ஏற்பாட்டில் நாட்டு காய்கறி விதைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ராமகிருஷ்ணன் கூறும்போது நாட்டு காய்கறி விதைகளின் பலன்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விதைகளினால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.ஆன்மீகத்துடன் அரிய கருத்தை எடுத்துச் சென்றால் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என கருதி நண்பர்களுடன் சேர்ந்து இத்தகைய அலங்காரத்தை செய்துள்ளோம்.அலங்காரத்தில் வெள்ளைப் பூசணி, அவரை பரங்கி,நவதானியங்கள்,உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாட்டு காய்கறி விதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.