“திருச்சியின் கூவமாக” மாறிய உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைக்க கோரிக்கை

0 192
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  “திருச்சியின் கூவமாக” மாறிய உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைக்க  மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் கோரிக்கை

உய்யக்கொண்டான் ஆறு திருச்சி  நகரின் மையப்பகுதியில் ஓடும் ஒரு முக்கியமான பாசனக் கால்வாய் ஆகும். இது காவிரி ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றாகும்.
உய்யக்கொண்டான் ஆறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட ஒரு பாசனக் கால்வாய் இது. வெள்ள காலங்களில் நீரைத் திசை திருப்பி, வேளாண்மைக்கு பயன்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.

பெட்டவாய்த்தலையில் காவிரியில் இருந்து பிரிந்து, திருச்சி மாநகர் வழியாகப் பாய்ந்து, திருவெறும்பூர் வாழவந்தான்கோட்டை ஏரியில் கடந்து பூதலூர் சேராண்டியில் இணைகிறது. சுமார் 46 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, 32,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட நீதிமன்ற வளாகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் இந்த ஆற்றின் கரையில்தான் அமைந்துள்ளன.

கழிவுநீர் கலத்தல் மற்றும் தற்போதைய நிலை உய்யக்கொண்டான் ஆறு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும், பாசனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தாலும், தற்போதைய நிலையில் அது கடுமையான மாசுபட்டிருக்கிறது.

திருச்சி மாநகரத்தின் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் அனைத்தும் இந்த ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இதனால் ஆறு சுகாதாரச் சீர்கேட்டுடன், துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீர் கலப்பால் உய்யக்கொண்டான் ஆறு “திருச்சியின் கூவம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு சீரழிந்துள்ளது.

காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் உய்யக் கொண்டான் ஆற்றில் தண்ணீர் திறப்பு முன் ஆகாயத் தாமரை அகற்றி வேண்டி தூய்மை ஆகாயத் தாமரை படர்ந்தும், ஆக்கிரமிப்புகள் நிறைந்தும், இதன் நிலை மோசமாக உள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உய்யக்கொண்டான் ஆறு அதன் அசல் நோக்கத்தை இழந்து, குப்பைகளும் கழிவுநீரும் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது. ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஆறு, முழுமையாக சீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படாவிட்டால், அதன் இருப்புக்கு ஆபத்து ஏற்படும்

உய்யக்கொண்டான் ஆற்றை தூய்மைப்படுத்தி, அதன் பழைய நிலைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான நீலமேகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.