வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கும் ஆர்ப்பாட்டம்

0 295
Stalin trichy visit

முசிறி போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு ஓய்வு பெற்ற கூட்டமைப்பினர் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கும் ஆர்ப்பாட்டம்.

 

திருச்சி, டிச. 20  திருச்சி மாவட்டம், முசிறி போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு சி.ஐ.டி.யு, மற்றும் ஓய்வு பெற்ற நல சங்க கூட்டமைப்பின் சார்பாக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முசிறி கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வரவுக்கும் செலவுமான வித்தியாச தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இறந்த தொழிலாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்வதை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்க போவதாக கிளை மேலாளர் தண்டபாணியிடம் கூட்டமைப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு சிஐடியு நிர்வாகி அசோக் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தை மண்டல தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக முக்கிய நிர்வாகிகளான சௌந்தரராஜன், சிவப்பிரகாசம், நைனா செல்வராஜ், சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில்பொருளாளர் சிவ சண்முகம் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.