சூரிய மின்சாரத்தால் தானியங்கி சார்ஜிங் தொழில்நுட்ப மாதிரி செயல் விளக்க நிகழ்ச்சி
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்துசூரிய மின்சாரத்தால் தானியங்கி சார்ஜிங் தொழில்நுட்ப மாதிரி செயல் விளக்க நிகழ்ச்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார் முன்னாள் தலைமை ஆசிரியர் ராகவன் திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசர் வட்ட தலைவர் விஜயகுமார் நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் எட்டாம் வகுப்பு படிக்கும் யுகேந்திரன் ஜெய் ஆகாஷ் மாணவர்கள்
சூரிய மின்சாரத்தால் தானியங்கி சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து பேசுகையில்,
பெட்ரோல் டீசல் நிலக்கரி போன்ற புதை வடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு புவி வெப்பமடைதல் பசுமை குடில் விளைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றாக சூரிய ஒளி, காற்று, நீர் போன்ற இயற்கை கூறுகளில் இருந்து ஆற்றலை எடுக்கும் வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கிடைக்கிறது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எல்லா நாடுகளுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. இதில் சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றல் முக்கியமானது.
சூரிய மின் அணுக் கதிர்கள், ஒளி மின்னழுத்திகளுக்குக் கிடைக்கும் போது உண்டாகும் சூரிய ஒளிக்கதிர் ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றிப் பெறப்படும் மின்சாரத்தின் மூலம் தேவையான மின்தேவையை நிறைவு செய்யப் பயன்படுகிறது. நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒளிக்கதிர் மின்னழுத்தியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி
மின்கலனில் சேமிக்கப்படுகின்றன.சேமிக்கப்படும் மின் ஆற்றலை சென்சார்கள் ஒரு அளவீட்டு பொருளின் அம்ச அளவைக் கண்டறிந்து, இந்த அளவை ஒரு கருவியில் சமிக்ஞையாக மாற்றும் சாதனங்கள்.
RF டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர்உணர்திறன் தொழில்நுட்பம் மூலம் மின்சார வாகனங்களுக்கு மின்சாரம் செலுத்த முடியும்.சமீபத்திய காலங்களில், மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. சார்ஜ் செய்யத் தேவைப்படும் மின்சாரத்தின் விலை, அதே அளவிலான வாகனத்திற்கு பெட்ரோலைப் பயன்படுத்துவதற்கான செலவை விட மிகக் குறைவு. கூடுதலாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உள்ளூர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மின்சாரம் பெற எளிதானது, இது எண்ணெய் சார்ந்து உலகளாவிய நெருக்கடியைக் குறைக்கிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனம் ஓட்டுவதைத் தேர்ந்தெடுப்பது, வெளியேற்றும் உமிழ்வுகளிலிருந்து தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனம்சார்ஜிங் நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு தானியங்கி சூரிய ஒளி மின்சக்தி தொழில்நுட்பம் பயன்படும் என மாணவர்கள் எடுத்துரைத்தனர்.