கீழக்குறிச்சியில் நியாயவிலைக்கடை அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி, டிச. 15 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலை கீழக்குறிச்சி பகுதியில் நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பொதுமக்கள் வைத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியில் நியாய விலை கடை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கினார் .

இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன், கிழக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ் ஜோஸ்பின் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.