விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு பூஜை

0 288
Stalin trichy visit

 

திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம், முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் கோவிலில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை நடத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், பூரண குணமடைந்து வர வேண்டுமென வேண்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்தனர்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜலிங்கம், நகரச் செயலாளர் சுந்தர்ராஜன், துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், சுரேஷ், மாவட்ட பிரதிநிதி சண்முகம், பூக்கடை பாண்டியன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் அணி பிரபு, கிளைச் செயலாளர்கள் லோகநாதன், செந்தில் ,சுரேஷ், மணிகண்டன், சண்முகம் ,யுகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விஜயகாந்த் பூரண குணமடைந்து வர வேண்டும் என காளியம்மன் கோவிலில் வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.