கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி
திருச்சி, மார்ச் 6 கவிஞர் எழுத்தாளர் நந்தலாலாவின் உடலுக்கு நேரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது..
முற்போக்கு எழுத்தாளர் கவிஞர், உறுப்பினருமான இயல் இசை நாடகம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான நந்தலாலா அவர்கள் தலைவர் கலைஞர் அண்ணா, பெரியார் ஆகியோருக்கு மிகவும் பிடித்தவர். குறிப்பாக கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இவருடைய இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
கவிஞர் நந்தலாலாவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், அரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.