மகா கும்பாபிஷேகத்திற்காக புனித நீர் எடுத்து வந்த பக்தர்கள்

0 243
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 15  சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி திருவள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி, ஸ்ரீ பெரிய அன்ன ஸ்வாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது – பெருந்திரளான  பக்தர்கள் ஊர்வலமாக புனித நீரை எடுத்துச் சென்றனர்*

திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட் அருகே தாளக்குடி திருவள்ளுவர் நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலசுப்பிரமணியம் சுவாமி, ஸ்ரீ பெரியண்ணா சுவாமி பரிவார ஸகித தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருக்குட பெரும் நன்னீராட்டு சாந்தி விழா ஆனி மாதம் இரண்டாம் தேதி நாளை 16ஆம் தேதி காலை 9.45 மணி முதல் 10.15 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக காவிரியின் தென்கரை கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு நம்பர் 1 டோல்கேட், தாளக்குடி வழியாக மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தாழக்குடி திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ பெரியண்ணசாமி கோவிலுக்கு புனித நீரை எடுத்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கீரமங்கலம் தாழக்குடி திருவள்ளுவர் நகர் கிராம மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு தீர்த்த படம் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை மங்கள , வாத்தியம் புண்யாவாஹனம், ரக்ஷாபந்தனன், அக்னகாரியத்துடன். மகாபூர்ணாகாதியுடன் முதல் கால பூஜை முடிவுறும் , இதனைத் தொடர்ந்து 16-ம் தேதி நாளை காலை இரண்டாம் கால பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து காவிரி தென்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை எடுத்து கடகம் புறப்பட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமானத்திற்கும் அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்திற்கும் புனித நீரானது ஊற்றப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி, ஸ்ரீ பெரியண்ண சுவாமி திருக்கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.