துறையூரில் குரு பகவானுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

0 249
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ள கோலாட்சு முருகர் ஆலயத்தில் குரு பகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது வருடம் வருடம் குரு பெயர்ச்சி முன்னிட்டு துறையூர் பகுதியில் உள்ள பக்தர்கள் குரு பகவானுக்கு பால்குடம் எடுத்து  தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வது வழக்கம் அதுபோல் இன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு துறையூர் மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பாலக்கரை திருச்சி ரோடு வழியாக கோவில் சன்னதியை வந்தடைந்த பக்தர்கள் குமர குருபராக காட்சியளிக்கும் முருகனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலில் அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.