தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்
மே 1 ந்தேதி தொழிலாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .அது த வகையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது் இதில் ஏஐடியுசி கொடியை திருச்சி மாவட்ட தலைவர் சிவா கொடியேற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை மூத்த தோழர் சின்னத்தம்பி ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தோழர்கள் செல்வராஜ், பொன்ராமன், இளங்கோவன், புவனேஸ்வரி, ஏ ஐ டி யு சி தோழர்கள் முகமது, சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.