சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் காணிக்கை

0 346
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் வருமானம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 336-ம், 2 கிலோ 867 கிராம் தங்கமும், 6 கிலோ 815 கிராம் வெள்ளியும், அயல் நாட்டு பணம் 82-ம், அயல்நாட்டு நாணயங்கள் 453-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.