தொட்டியம் மதுரை காளியம்மன் உண்டியலில் ரூ.3.64 லட்சம் பக்தர்கள் காணிக்கை

0 190
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24 திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டும் இல்லாமல் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து மதுரை காளியம்மன் வழிபட்டு செல்வர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் நேற்று உண்டியல் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த்,
செயல் அலுவலர் விஜய், ஆய்வர் மலர்விழி,மேலாளர் பாலன் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கைகளை கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூபாய் 3 லட்சத்து 64 ஆயிரத்தி 777 ரூபாய் கிடைக்க பெற்றிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.