கார் மீது லாரி மோதியில் புதுமாப்பிள்ளை பலி

0 157
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24 கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு காரில் திரும்பிய புதுமண தம்பதியர் கார் விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே புது மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுப்பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இவரது மகன் டொனாட் இவரும் இவரது மனைவி அமுல்யா (34) இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் புதுமண தம்பதிகள் காரில் வேளாங்கண்ணிக்கு நேற்று சென்று விட்டு இன்று அதிகாலை துவாக்குடி அருகே உள்ள திருச்சி அரை வட்ட சாலையில் சென்ற பொழுது எதிரே வந்த கண்டைனர் லாரி மோதியது இதில் சம்பவ இடத்திலேயே டொனாட் பரிதாபமாக உயிரிழந்தார். அமுல்யா (34)பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவம் பற்றிதுவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு கார் விபத்தில் சிக்கிய கணவன் மனைவியை மீட்க முடியாதததால் திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர் இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமல்யாவுக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் பற்றி துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.