மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
திருச்சி, ஆக.14 மணப்பாறை அருகே சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் குரும்பர் இன மக்களின் குலதெய்வமான சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி அம்மன் கோவிலில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 6 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கரகம் பாலித்து சக்திகாய் உடைப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பல்வேறு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேறிய நிலையில் ஆலயத்தின் முன்பு தரையில் அமர்ந்திருக்க சிறப்பு வழிபாடுகளுக்கு பின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதையடுத்து தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.