சாரண சாரணியர்கள் இயக்க வைரவிழா கலைநிகழ்ச்சிகள்

0 727
Stalin trichy visit

திருச்சி, ஜன.31  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாரண சாரணியர் இயக்கத்தின் பிரம்மாண்டமான ஜம்பூரி நடந்து வருகிறது.

சமத்துவபுரமாக பாரத சாரண சாரணியர் இயக்கம் வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஜாம்போரி திகழ்கிறது. 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்தும் 4 வெளிநாடுகளில் இருந்தும் சாரணர்கள் இதில் பங்கேற்று உள்ளார்கள்.

பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களும், அவர்களின் ஆசிரியப் பெருமக்களும் சாரணர்களாக ஒருங்கிணைந்துள்ளார்கள். காலை முதல் சாகசப் பயிற்சிகளிலும், சாரண வகுப்புகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சாரணர்கள் மாலை நேரங்களில் கலைகளின் வழியாக தங்களின் திறமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவ்வகையில் மூன்றாம் நாள் நிகழ்வின் மாலை நேரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய உடையில் வந்திருந்தார்கள். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை வேட்டி சட்டை அணிந்து சென்றது அங்குள்ளவர்களை உற்சாகப்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.