பாலக்கட்டையில் படுத்திருந்தவர் குடிபோதையில் தவறி விழுந்து பலி

0 314
Stalin trichy visit

திருச்சி, பிப்.5 திருச்சி மாவட்டம்,  தொட்டியம் வட்டம் கல்லூர்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் அரவாண்டி (37). இவர் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் குடிபோதையில் பால கட்டையில் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது தவறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து அவரது மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் அரவாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.