சாலை விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட இருவர் உயிரிழப்பு
திருச்சி மார்ச் 10 திருச்சி வயலர்ஸ் ரோடு முல்லை தெருவை சேர்ந்தவர் முகமது ஜக்கரியா (வயது 49).இவர் திருச்சி தனியார் ஸ்டீல் கம்பெனியில் நெய்வேலியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் கடலூரில் நேற்று முன்தினம் இரவு அலுவலக பணி தொடர்பாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்தில் ஜக்கரியா பரிதாபமாக இறந்தார். மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் இருந்த 2 வாலிபர்களும் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு வாலிபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.