சத்திரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 31
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 11 சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி தீர்க்க முடியாமல் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்திரம் பேருந்து நிலையப் பகுதி நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பேருந்து நிலையப் பகுதி முழுவதையும் ஆட்சியர் பிரத்திக்தாயள், புதன்கிழமை ஆய்வு செய்தார். திருச்சி மாநராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், திருச்சி கோட்டாட்சியர் சாலை தவவளன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப் பொது மேலாளர் சதீஷ்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோரும் ஆட்சியருடன் சென்று பேருந்து நிலையத் தின் தற்போதைய சூழல் குறித்து ஆட்சியருக்கு விளக்கினர். பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்தவித சிரமமும் இல்லாமல் பேருந்து நிலையத்தை செயல்ப டுத்துவது குறித்து ஆட்சியர் கருத்துகளை கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, வட்டாரப் போக்குவரத்து அலு வலகம், மாநகரப் போக்குவரத்து காவல்துறை, சாலைப் பயனீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் மற்றும் ஆலோ சனைகள் கோரப்பட்டு, அதன்படி, சத்திரம் பேருந்து நிலையப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என வரு வாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.