கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி ஏற்பு

0 277
Stalin trichy visit

75 வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஜன.27 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலத்தில் நேற்று  ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கிராம சபை சிறப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பெண் குழந்தைகளுக்கான உறுதிமொழியை வாசித்தார் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியை வாசிக்க ஊர் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் முசிறி ஒன்றிய குழு தலைவர் பாலா ராமச்சந்திரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமைத் திட்டம் அலுவலர் தேவநாதன் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன் மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் உள்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.