காதிகிராப்ட்டில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, அக்.2 மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில்நிலையம் எதிரில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்தில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குத்து விளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துறையூர் சட்டன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,மாவட்ட நகர் ஊரமைப்புகுழு உறுப்பினர் வைரமணி, நகரப் பொறியாளர் சிவபாதம் உதவி இயக்குநகர்கள்(கதர் கிராமத் தொழில்கள்) கே.என்.சுதா, வ.பாலசுப்பிரமணியன், (செய்தி மக்கள் தொடர்புத்துறை) உதவி தொடர்பு அலுவலர் (செய்தி) மு.சுதாகர், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.