மகாத்மா காந்தி பிறந்தநாள் – காமராசர் நினைவு நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, அக்.2 திருச்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் உருவச்சிலைகளுக்கு அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜரின் 47வது நினைவு நாளையொட்டி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி தபால் நிலையம் அருகிலுள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட நகர் ஊரமைப்புப்புகுழு உறுப்பினர் வைரமணி, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கல்வி கண் திறந்த காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானவர் பங்கேற்றனர்.