தி.மு.க. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்க வாய்ப்பு : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

0 162
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  திருச்சியில் நடைபெறும் திமுக இரண்டாவது மாநில மாநாட்டில் 1, 2 தேர்தல் வாக்குறுதிகள் தமிழக முதல்வர் சொல்வதற்கு வாய்ப்புள்ளது.- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

திருச்சி அருகே சிறுகனூரில் திமுக இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது..,

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாநாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மூன்று லட்சம் நாற்காலிகள் தொண்டர்கள் அமரும் வகையில் போடப்பட்டுள்ளது 24 ஆயிரம் வாகனங்கள் வருகை தர உள்ளது என்பதால் மின்விளக்கு வசதி பார்க்கிங் வசதி பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்டச் செயலாளர்கள் உடன் பேசி கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாநாடு சரியாக 3:00 மணிக்கு துவங்க உள்ளது முன்னதாக இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறும். சரியாக மார்ச் ஒன்பதாம் தேதி மாலை 5:30 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறுகனூரில் உள்ள விழா மேடைக்கு வருகை தருவார் அதன் பின்னர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே இடத்தில் மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் தான் ஏழு வாக்குறுதிகள் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த மாநாட்டிலும் ஒன்று இரண்டு வாக்குறுதிகள் தமிழக முதல்வர் சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது நிதி நிலைமைக்கு ஏற்ப வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை இதற்கு ஒரு தமிழக முதல்வர் முடிவெடுப்பார். மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றமும் காவல்துறையினர் செய்ய உள்ளனர் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.