முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, மார்ச் 6 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 6.30 மணி அளவில் சத்தியமூர்த்தி நகர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில்..
மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் M.A.அன்பழகன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.