தி.மு.க. இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு

0 205
Stalin trichy visit

திருச்சி, நவ. 18  திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருசக்கர வாகனப் பேரணியை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் வரவேற்று சால்வை அணிவித்து குளிர்பானங்கள் குடிநீர் பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது மாநாட்டின் முக்கியத்துவம் தமிழ்நாட்டில் உள்ள பட்டித் தொட்டி எங்கும் சேர்க்கின்ற விதமாக 188 இருசக்கர வாகனங்களை கொண்ட இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இரண்டு தினங்களுக்கு முன்பு கழக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு வருகை புரிந்தது இதனை வரவேற்கும் விதமாக சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் மாநகர கழகச் செயலாளரும் மண்டல குழு தலைவரும்மான
மு மதிவாணன் இருசக்கர வாகன பேரணி வரவேற்று அவர்களுக்கு குளிர்பானங்கள் குடிநீர் பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கி சால்வை அணிவித்து மீண்டும் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக கலைஞர் அறிவாலயத்தை அடைந்தது. அறிவாலயத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது
இந்த நிகழ்வுகளில் பகுதிகழகச் செயலாளர்கள் மோகன் பாபு மணிவேல் ராஜ்முஹம்மது
நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துதீபக் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.