தி.மு.க. இளைஞரணியினருக்கு பயிற்சி பாசறை – வலைதள பயிற்சி
திருச்சி, ஜூன் 4 தெற்கு மாவட்ட கழக இளைஞரணியினருக்கு பயிற்சி பாசறை மற்றும் வலைதள பயிற்சி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட பெருவாரியான இளைஞர்கள் இளைஞரணியில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் திருச்சி தெற்கு மாவட்டக் கழக இளைஞரணியில் புதிதாக இணைந்துள்ள இளைஞர்களை பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் வாரியாக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களாக நியமித்துள்ளார்.
இளைஞரணிச் செயலாளர் . உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இவர்களுக்கான அறிமுகக் கூட்டம் மற்றும் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் இதயமாம் இளைஞரணியில் இணைந்துள்ள இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி நிர்வாகிகள் குறிப்பு நோட்டுகளை (மினிட்புத்தகம்) வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு மதிவாணன், செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன்பிரசன்னா, சமூக வலைதள பயிர்ச்சியாளர் இளமாறன், மாவட்ட அமைப்பாளர் அ.வெங்கடேஸ் குமார்
மாநகர அமைப்பாளர் மு.ர.முத்துதீபக் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்