திருச்சி பீமநகர் ஸ்ரீஆதி காளிகாம்பாள் கோவிலில் சிவன் சிலை திருட்டு : காவல்துறையினர் விசாரணை
திருச்சி, ஜூலை 1 திருச்சி – ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் கோவிலில் சிவன் சிலை திருட்டு – காவல்துறையினர் விசாரணை
திருச்சி பீமநகர் பகுதியில் ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது இக்கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோவிலில் வந்து வழிபாடு செய்வது வழக்கம் இந்நிலையில் நேற்று கோவில் அர்ச்சகர் கிஷாந்த் மனோஜ் வழக்கம்போல பூஜை வழிபாடுகள் நடத்தி இரவு கோவிலை நடை சாத்தினர்.
மீண்டும் வழக்கம்போல் காலை வந்து கோவில் அர்ச்சகர் கோவில் திறந்து பார்த்தபோது கருவறையில் உள்ள சுமார் மூன்று அடி உயரம் கொண்ட சிவன் பித்தாளை சிலை திருடு போனது தெரியவந்தது இதனை அடுத்து கண்ட்ரோல்மென்ட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் திருடு போன சிலை குறித்து விசாரித்து வருகின்றனர் திருச்சி பீமநகர் பகுதியில் அதிகம் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் சிலை திருடு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது