உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை : ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி, ஜன.3 இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அறிவிப்பு
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.