போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

0 218
Stalin trichy visit

திருச்சி ஜூன் 7 திருச்சி உறையூர் மார்க்கெட் அருகாமையில் ஒரு மர்ம நபர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது உறையூர் மார்க்கெட் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது போதை மாத்திரை விற்பனை செய்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற வெள்ளை ராஜா (28 )
என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.