போதை மாத்திரைகள் விற்பனை: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது
திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேரை திருச்சி எஸ் பி தனி படை பிரிவு போலீசார் கைது செய்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாதிரி வைத்து விற்பனை செய்து வருவதாக திருச்சி எஸ் பி தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனி படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனையிட்டபோது காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாபரலி மகன் ஆசிக் ( 24 )இவர் டிப்ளமோ படித்துள்ளார்.
காட்டூர் போஸ் தெருவை சேர்ந்த முகமது ரபிக் மகன் முகமது ஹர்ஷத் (23) இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார் ஆகிய இருவரும் போதை மாதிரி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் திருச்சி எஸ் பி தனிப்படை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து போதை மாத்திரை பத்து அட்டைகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.