அனுமதி இல்லாமல் பட்டாசுகளை ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்

0 356
Stalin trichy visit

திருச்சி அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எளிதில் தீப்பெற்ற கூடிய பட்டாசுகளை அரசு அனுமதி இல்லாமல் எடுத்து வந்த இரண்டு ஈச்சர் உட்பட 3 சரக்கு வாகனத்தை மணிகண்டம் போலீசார் பறிமுதல் செய்ததோடு ரூபாய் 16.40 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசியில் இருந்து அரசின் உரிய அனுமதி இல்லாமல் இரண்டுஈச்சர் மற்றும் ஒரு டாட்டா ஏசி வாகனத்தில் பட்டாசுகளை ஏற்றி வந்து மணிகண்டம் அருகே உள்ள அலந்தூர் பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் மாற்றிக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக ரோந்து சென்ற மணிகண்டம் சப் இன்ஸ்பெக்ட்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் மூன்று வாகனங்களையும் சோதனை செய்த பொழுது அவர்களிடம் அரசின் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு பொருட்களை எந்தவித பாதுகாப்பு இல்லாமல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது அதன் அடிப்படையில் அவர்களை கைது செய்து விசாரித்த பொழுது திருச்சி இனாமத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாண்டியன் (27), மதுரை உசிலம்பட்டி உத்தம நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கணேசன் (33), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா (39) என்பது தெரியவந்தது அவர்கள் மூன்று பேரையும் கைது செய்ததோடு மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த வாகனங்களில் ரூ 16.40 லட்சம் மதிப்பில் இருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.