நிலுவைத் தொகை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0 231
Stalin trichy visit

திருச்சி, செப். 14  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட நவல்பட்டு, வாளவந்தான்கோட்டை, முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை ஆகிய திட்டப்பகுதிகளில் வீடு மற்றும்  மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வாரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்டகாலமாக பலர் நிலுவைத்தொகையை செலுத்த முன்வரவில்லை.

ஆகையால், ஒதுக்கீடுதாரர்கள் இவ்வறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடுஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து, நிலுவைத் தொகைகளை செலுத்தி, வாரிய கொள்ளமாறு, விதிமுறைகளின்படி கிரையப்பத்திரம் பெற்றுக் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை ஒதுக்கீடுதாரர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.