புதுக்கோட்டையில் துரை வைகோ எம்.பி. ஆய்வு
புதுக்கோட்டை, ஜூன் 21 திருச்சி தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றிடங்களில் துரை வைகோ எம்.பி. நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக, கந்தர்வக்கோட்டை முதல் முதுகுளம் வரை உள்ள நெடுஞ்சாலைத்துறையின் 4 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்தக்கோரி வந்த கோரிக்கைக்காக அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து கந்தர்வகோட்டை புதுநகரில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு, ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர்த் தொட்டி வசதி வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியளித்தார்.
பின்னர் புதுக்கோட்டை பொன்னான்விடுதிக்கு சென்று, மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளமனுவை சுட்டிக்காட்டி அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடினேன். ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்படி இல்லை என்றால், எனது எம்பி நிதியிலிருந்து தொகை ஒதுக்கி நானே குடிநீர்த்தேக்க தொட்டியை அமைத்துக் கொடுப்பேன் என்று துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.