குழந்தையிடம் தங்க தாயத்தை திருடிய முதியவர் கைது
திருச்சி ஆக 13 திருச்சி திருவரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாணிக்க சுந்தரம் (38) இவரது ஒன்றரை வயது மகன் பவன் குமார் நேற்று வீட்டின் அருகே பவன்குமார் விளையாடிக் கொண்டிருந்தார் அப்பொழுது குழந்தை அருகே வந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென்று பவன் குமார் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தங்க தாயத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த மர்ம ஆசாமியை பிடித்து திருவரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த மர்ம ஆசாமியிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த முத்து (வயது 60) என்பது தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் முத்துவை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிராம் தங்க தாயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.