ஊதிய உயர்வை வலியுறுத்தி திருச்சியில் மின் பொறியாளர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி பிப் 27 ஊதிய உயர்வை வலியுறுத்தி திருச்சியில் மின் பொறியாளர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு பொறியாளர் கழகம் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது கிளாஸ் 1 மற்றும் 2க்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் மையக்குழு உறுப்பினர் பொறியாளர் கழகம் விக்ரம்,
மண்டல செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஐக்கிய சங்கம் கண்ணன்
உட்பட 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த கூட்டுக்குழு மண்டல செயலாளர் சந்தானகிருஷ்ணன்,
கிளாஸ் 1 மற்றும் 2க்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது, கிளாஸ் 2 மற்றும் 3விற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர், பொறியாளர் என வாரியத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறனர். எனவே பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழக அரசு நல்ல ஒரு தீர்வை எங்களுக்கு வழங்க வேண்டும். சமூக நீதி காக்கின்ற இந்த அரசு வருகிற திங்கள் என்று எங்களுக்கு ஊதிய உயர்வு குறித்து தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை தமிழக அரசு பதிலுக்கு பின்பு தான் எடுக்கப்படும் என தெரிவித்தார்.